100 நாட்கள்,
60 கேமராக்கள், 15 பிரபலங்கள்(?) என்பது பிக்பாஸின் sub- title.. அந்த 15 பிரபலங்களை,
வெளியுலக தொடர்பற்று, ஒரு வீட்டில் அடைத்து வைத்து, அவர்களின் உணர்ச்சி குவியலை வைத்து
விளையாடும் வாழ்வியல் விளையாட்டு!!! இது 15
மனிதர்களுக்கு மட்டுமல்ல!!!
உலக மக்கள் அனைவரை
வைத்து ,மற்றொரு பிக்பாஸ் நிகழ்வை நவீன உலகம் நடத்தி கொண்டிருக்கிறது. இதனை எத்தனை
பேர் உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை!!!
முகநூலில் தரவுகள்
களவாடப் பட்டதாக, ஒரு விஷயம் வெளிவந்த போது, இணைய உலகமே ஆச்சரியமாக பார்த்தது. ஆனால்,
முகநூலில் நிறுவனர் எப்படி உலகில் முக்கிய பணக்காரராக இருக்கிறார் என்று யாரும் யோசிக்கவில்லை.
இத்தனைக்கு முகநூல் இலவச வலைதளம்!!!
கூகுளில் ஒரு பொருளை
தேடி விட்டு…. முகநூலிற்கோ/ அல்லது மற்றொரு தளத்திற்கோ சென்றால், நீங்கள் கூகுளில்
தேடிய பொருளில் விளம்பரமாக…. உங்களது பக்கத்தில் வந்து நிற்கும்!!!
யூடியுப்பில் ஒரு
வீடியோ பார்த்து விட்டு, மற்றொரு நாள்….. அதே யூடியுப்பிற்கு செல்லும் போது, முந்தைய
நாள் பார்த்த விடியோக்களுடன் தொடர்புடையவை அதிகமாக தென்படும்!!!
இன்றைய சூழ்நிலையில்
டிவியின் வெளிவரும் விளம்பரங்கள் அனைத்தும், பெண்களினையும் குழந்தைகளினையும் குறி வைத்து
வெளியிடப்படுகிறது. அதை பற்றி சிந்தித்திருக்கிறேமா???
இவைக்கு பின்னால்,
விஜய் டிவியின் பிக்பாஸ் போல… வணிக நிறுவனங்கள்/பெரு நிறுவன முதலாளிகள் இருக்கிறார்கள்.
யார் பிக்பாஸ் என்று தெரியாது போல்… இவர்களும் யாரென்று தெரியாது. நீங்கள் இல்லுமினாட்டி
என்று கூட வைத்து கொள்ளுங்கள்(எனக்கு இல்லுமினாட்டி மீதும் நம்பிக்கையில்லை)
இதற்கு பின்னால்….
பெரும் தரவு என்னும் பிக் டேட்டா இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு திறன் எனப்படும் artificial
intelligence முக்கிய பங்கு வகிக்கின்றன.
அமெரிக்க தேர்தலில்,
டிரம்ப்பின் வெற்றியில், பெரும்தரவின் பங்கு முக்கியம். இணைய வாசிகளும், பொது மக்களும்
என்ன மனநிலையில் இருக்கிறார்கள். அவர்களை எப்படியெல்லாம் மனநிலையை மாற்றலாம்??? என்பதை
யும் பெரும் வணிகம் நன்றாக புரிந்து வைக்கிறது. இது தேர்தலுக்கு மட்டுமல்ல!!!! உலகில்
உள்ள அனைத்து பண்டங்களும் சேவைகளும் அடக்கம்!!!
பழைய பண்டங்களை
முழுமையாக அழித்து விட்டு, புதிய பண்டங்களை அறிமுகம் செய்து, அதன் பயன்பாட்டை அதிகப்படுத்தி,
பழைய பண்டத்தை முழுமையாக மறைய செய்வதே….. வணிக
நிறுவனத்தின் திறமை!!! அதையும் உண்மை என நம்பி, நாமும் வங்கி கொண்டிருப்போம்!!!!
பழங்காலத்தில்
முக்கியமான/நல்ல ஊட்ட சத்து மிக்க கடலைமிட்டாய், முற்றிலும் அழிக்கப்படுவதற்கு முக்கிய
காரணம் வணிக நிறுவனத்தின் உத்தியே!! ஆனால், அதே கடலை மிட்டாய் வணிகத்தை தூக்கி நிறுத்தியதும்
,அதே வணிக மூளை என்பது நகை முரணாக விஷயம்!!! இதே நிலையில் வேட்ஷ்யிலும் நடந்தது!!
இன்றைய இந்திய
பொருளாதார சூழ்நிலையில், குடும்பத்தின் தலைவராக ஆண்களே இருக்கிறார்கள். ஆதலால், செலவு
செய்ய பயப்படுவார்கள். ஆதலால் செலவு செய்ய தாயராக இருக்க கூடிய குழந்தைகளினையும் பெண்களினையும்
திட்டமிட்டு விளம்பர படுத்துகின்றனர். ஆண்களுக்கு என்றால், வேட்டியும், பேர்னஸ் கீரிம்
மட்டும் தான் மிஞ்சும்!!!
பழங்காலத்தில்
நிலவுடமை சமுதாயம், பொது மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ,வர்க்க ரீதியாகவும், சாதிய
படிநிலைகளை வைத்தும் முடிவு செய்தது. இன்றும் அந்த அமைப்புகள் மட்டுமே மாறி இருக்கிறது.
இன்று அது வணிக நிறுவனங்களாக மாறி நிற்கிறது. இன்றும் பொது மக்கள் என்ன உடை உடுத்த
வேண்டும், காலையில் என்ன சாப்பிட வேண்டும், விடுமுறை நாட்களில் எங்கு செல்ல வேண்டும்
என்பது வரைக்கும் முடிவு செய்வது கார்பரேட்டே!!!!
பகுத்தறிவு புலிகளாக
சொல்லி கொள்ளும் நாம்…. என்றுமே சுயமாக சிந்தித்ததில்லை!!! மற்றவரின் புரிதலை, நம்முடைய
புரிதலாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!!!
இன்று நீங்கள்
வேண்டுமானால், மகத்தையும், ஐஸ்வர்யாவைவும், யாஷிகாவையும் திட்டி கொண்டிருக்கலாம். ஆனால்,
நாமும் அவ்வாறாக தான் நடந்து கொண்டிருக்கிறோம் என்பதை எப்போது புரிந்து கொள்வோம்!!!
மகத் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போது புரிந்து கொள்ளலலாம். நமக்கு அந்த வாய்ப்பை... வாழ்வியல் எப்போதும் தந்ததில்லையே !!!
அந்த 15 நபர்களுக்கும்,
பிக்பாஸ் யாரென்று தெரியாது… அது போல், நம்மை இயக்கும் பிக்பாஸ்களும் யாரென்று தெரியாது.
அது தெரிந்தால், வாழ்க்கை சுவராசியம் இருக்காது!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment